tamilnadu

img

வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 0.35 சதவிதம் குறைப்பு- ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 0.35 சதவிகிதம் குறைத்து  நடவடிக்கை எடுத்துள்ளது. 
மும்பையில், இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதி கொள்கை ஆய்வு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.  6 உறுப்பினர்களை கொண்ட இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.   
இதைத்தொடர்ந்து  இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழுவானது இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4வது முறையாக குறைக்கப்பட்டு உள்ளது.  இதன்படி 0.35 சதவீதம் அளவிற்கு வட்டி விகிதம் குறைந்துள்ளது.  இதனால் 2019 ஜனவரியில் இருந்து ஓராண்டில் மொத்தம் 1.10 சதவீதம் அளவிற்கு இந்த வட்டி விகிதம் குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை வீடு, வாகனங்கள் வாங்குவோர் மற்றும் தொழில் தொடங்குவோர், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
 

;